சென்னையில் காங்கிரசின் செல்வப்பெருந்தகை அதிரடி கைது!
Congress Charges at Raj Bhavan A Fight for the Mahatma and State Funds
மத்திய பாஜக அரசு 100 நாள் வேலைத் திட்டத்தில் (MGNREGA) மகாத்மா காந்தியின் பெயரை நீக்க முயற்சிப்பதாகவும், அந்தச் சட்டத்தையே நீர்த்துப்போகச் செய்வதாகவும் குற்றம்சாட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நேற்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றது.
காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் 500-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே திரண்டனர். எதிர்ப்பு முழக்கம்: பிரதமர் மோடியின் உருவப்படத்தை எரித்துத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்த காங்கிரஸாரை, ஆளுநர் மாளிகையை அடையும் முன்பே போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.
செல்வப்பெருந்தகையின் குற்றச்சாட்டுகள்:
ஜிஎஸ்டி மற்றும் பேரிடர் கால நிதியை மாநிலங்களுக்கு வழங்குவதில் மத்திய அரசு பாராமுகமாக உள்ளது. 100 நாள் வேலைத் திட்டத்தில் மாநில அரசு 40% நிதி அளிக்க வேண்டும் என்ற புதிய நிபந்தனை, பாஜக ஆளாத மாநிலங்களைப் பழிவாங்கும் செயல்.
"பெண்களுக்கான உரிமைத் தொகையைத் தடுக்க அதிமுகவும் பாஜகவும் நீதிமன்றம் மூலம் சதி செய்கின்றனர். அந்தச் சதியை முறியடிக்கவே முதல்வர் ஸ்டாலின் முன்கூட்டியே ₹5,000 வழங்கியுள்ளார்," எனப் பாராட்டுத் தெரிவித்தார்.
English Summary
Congress Charges at Raj Bhavan A Fight for the Mahatma and State Funds