கோவையில் காங்கிரஸ் வேட்பாளர்கள் திணறல்! தேர்தலுக்கு முன்பே அதிமுக வசமாகும் கோவையின் 2 தொகுதிகள்? என்ன நடக்கிறது?
Congress candidates in Coimbatore are in trouble AIADMK will win 2 seats in Coimbatore before the elections What is happening
தமிழக சட்டமன்றத் தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட கோவை மாவட்டத்தின் இரண்டு தொகுதிகளில் கட்சியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூலூர் மற்றும் கவுண்டம்பாளையம் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் ஸ்ரீநிதி மற்றும் சூர்யபிரகாஷ் போட்டியிடுகின்றனர். இந்த இரண்டு தொகுதிகளும் தற்போது அதிமுக வசம் உள்ளதால், கடுமையான போட்டி நிலவி வருகிறது.
ஆனால், களநிலவரம் காங்கிரஸுக்கு சாதகமாக இல்லையென கூறப்படுகிறது. தேசிய மற்றும் மாநில அளவிலான முக்கிய தலைவர்கள் பிரசாரத்திற்கு வராதது, வேட்பாளர்களுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ராகுல் காந்தி கோவை வந்தபோதும், பொதுப் பிரசாரம் மேற்கொள்ளாமல் சென்றது கட்சித் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், வேட்பாளர் தேர்வில் உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் அடிமட்டத் தொண்டர்கள் திருப்தியில்லாத நிலையும் கட்சியின் செயல்பாட்டை பாதித்துள்ளது. இதன் விளைவாக, பலர் தேர்தல் பணிகளில் முழுமையாக ஈடுபடாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால், இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் நேரடி களப்பணிகளையே நம்பியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. திமுக மற்றும் பிற கூட்டணிக் கட்சிகளின் முழு ஆதரவு கிடைத்தால்தான் வெற்றி சாத்தியம் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த நிலைமை தொடர்ந்தால், தேர்தலுக்கு முன்பே இந்த தொகுதிகளில் காங்கிரஸ் பலவீனமாகிவிட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இருப்பினும், இறுதிக்கட்ட பிரசாரத்தில் கூட்டணியின் ஒத்துழைப்பு அதிகரிக்குமா என்பதே இப்போது முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
English Summary
Congress candidates in Coimbatore are in trouble AIADMK will win 2 seats in Coimbatore before the elections What is happening