ராகுல் காந்தியின் நடைபயணம்.. தமிழகத்திற்கு மீண்டும் வருகை.! - Seithipunal
Seithipunal


ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் இன்று மீண்டும் தமிழகத்திற்கு வருகை தருகிறார்.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். இதில், நேற்று 21வது நாளில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் பாத யாத்திரை மேற்கொண்டார்.

இந்த நிலையில் நிலம்பூர், வழிகடவு வழியாக நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு இன்று மாலை 3 மணிக்கு வருகை தருகிறார். அவருக்கு தமிழக காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையிலான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வரவேற்பை அளிக்கின்றனர்.

அதன் பின்னர், நடைபயணமாக கூடலூர் பழைய பேருந்து நிலையம் செல்கிறார். அங்கே பழங்குடி மற்றும் ஆதிவாசி மக்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். அதனைத் தொடர்ந்து சாலை வழியாக நடந்து சென்று புதிய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பொதுகூட்ட மேடையில் மாலை 5 மணிக்கு உரையாற்றுகிறார்.

அதன் பின்னர் இரவு 7 மணிக்கு கூடலூர் தனியார் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கேரவனில் ஓய்வெடுக்கிறார். அதைத் தொடர்ந்து நாளை காலை 8 மணிக்கு கர்நாடகா சென்றடைகிறார். ராகுல் காந்தியின் வருகையை ஒட்டி கூடலூரில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress Bharat jodo yatra Rahul Gandhi comes to koodalur today


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->