எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து.. நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் காங்கிரஸ் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து வரும் மார்ச் 31ஆம் தேதி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் அனைத்து மாநில பொறுப்பாளர்கள் மற்றும் தேசிய பொதுச்செயலாளர் களுடன் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தலைமையில் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரியங்கா காந்தி, உம்மன் சாண்டி, முகுல் வாஸ்னிக், தாரிக் அன்வர், ரந்தீப் சுர்ஜிவாலா, அஜய் மாக்கன் மற்றும் பொருளாளர் பவன்குமார் பன்சால் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் தேசிய அளவிலான முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து வரும் மார்ச் 31ஆம் தேதி பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை ஏற்றத்தை கண்டித்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விலைவாசி இல்லாத பாரதம் என பெயரிடப்பட்டுள்ளது.

மேலும், ஏப்ரல் 2ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களிலும், ஏப்ரல் 7ஆம் தேதி மாநில தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியை முடிவு செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress announces nationwide protest against fuel price hike


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->