தூய்மை பணியாளர்களுக்கான குறைகேட்பு..மாவட்ட ஆட்சியர்,MLA பங்கேற்பு!
Complaint for sanitation workers District Collector MLA participation
தூய்மை பணியாளர்களுக்கான குறைகேட்பு மற்றும்ஆய்வுக் கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய திட்டங்கள் மற்றும் அவர்களது குறைகளை இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார் ,
தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரியத் தலைவர் திப்பம்பட்டி டாக்டர்.வெ.ஆறுச்சாமி அவர்கள் தலைமையில் இராணிப்பேட்டை மாவட்டஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தாட்கோ துறையின் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கான குறைகேட்பு மற்றும்ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப., ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர்
ஜெ.எல்.ஈஸ்வரப்பன், தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரியம் உறுப்பினர் அரிஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர்செ.தனலிங்கம், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை ந.செ.சரண்யா தேவி. மண்டல இயக்குநர் நகராட்சி நிர்வாகம்நாராயணன், உதவி இயக்குநர் பேரூராட்சிகள் திருஞானசுந்தரம், தாட்கோ மேலாளர் அமுதாராஜ், மாவட்ட ஆதிதிராவிடர்மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அறிவுடையநம்பி மற்றும் பலர் கலந்து கொண்டனர்,

கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய திட்டங்கள் மற்றும் அவர்களது குறைகளை மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார் ,இந்த முகாமில் தூய்மை பணியாளர்கள் கலர்ஸ் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை முன் வைத்தனர், இந்தக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வர் ஐயப்பன், மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா ஆகியோர் முகாமுக்கு வந்தவர்களிடம் நிறைவறைகளை கேட்டறிந்தார், அரசின் திட்டங்களை முறையாக செயல்படுத்த அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியரும் சட்டமன்ற உறுப்பினரும் அறிவுறுத்தினர், அதை போல் நலத்திட்ட உதவிகளையும் தகுதியுடைய பயனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு உடனடியாக நல்ல திட்ட உதவிகளும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
English Summary
Complaint for sanitation workers District Collector MLA participation