வி.சி.கவினரால் பிரஸ் மீட்டில் சலசலப்பு.!! பாதியில் எஸ்கேப் ஆனார் திருமாவளவன்!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் இன்று காலை திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடப் போவதாக தெரிவித்தார். 

அதற்கு கடந்த 5 ஆண்டுகளாக சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் உங்களை சந்திக்க வேண்டும் என்றால் தொகுதி மக்கள் சென்னைக்கு வர வேண்டி உள்ளது. நீங்கள் சிதம்பரம் தொகுதி பக்கமே வருவதில்லை என்ற குற்றச்சாட்டை பொதுமக்கள் முன்வைக்கின்றனர்.

உங்களுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் சிதம்பரம் தொகுதியில் எங்கே உள்ளது? என செய்தியாளர் கேள்வி கேட்டதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் சிதம்பரம் தொகுதியில் இல்லை. ஆனால் எனது தொகுதி மக்கள் கூப்பிட்டால் உடனே வருவோம் என திருமாவளவன் தெரிவித்தார். 

இவ்வாறு செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பியதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் செய்தியாளர்கள் இதுபோன்ற கேள்விகள் கேட்கக் கூடாது என மிரட்டும் தோனியில் பேசி உள்ளனர்.

நாங்கள் விசிக நிர்வாகிகளிடம் கேள்வி கேட்கவில்லை, கட்சியின் தலைவர் திருமாவளவனிடம் தான் கேள்வி கேட்கிறோம் என செய்தியாளர் கூறியதால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி சலசலப்பு ஏற்பட்டது.

செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப உரிமை உள்ளது என இருதரப்பையும் சமாதானம் செய்த திருமாவளவன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடு முழுவதும் செல்வதால் தொகுதி பக்கம் சரியாக வர முடியவில்லை. இதற்கு கூடிய விரைவில் தீர்வு காணப்படும் எனக் கூறி விட்டு செய்தியாளர்கள் சந்திப்பை ரத்து செய்துவிட்டு பாதியிலேயே எஸ்கேப் ஆனார் திருமாவளவன். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Commotion at Thirumavalavan press meet


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->