மோடிக்கு எதிராக களமிறங்கிய மிமிக்கிரி நடிகர் - இன்று வேட்புமனுத் தாக்கல்.!
comedy artis siyam rangeela nomination in varanasi constituency
7 கட்டமாக நடைபெறும் மக்களவைத் தேர்தலில் இறுதி கட்டமாக வரும் ஜூன் மாதம் 1 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் அன்றைய தினம் வாரணாசி தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தத் தொகுதியில், பாஜக வேட்பாளராக பிரதமர் மோடி 3 வது முறையாக போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அந்தத் தொகுதியில் தொடங்கியுள்ளது. அதன்படி பிரதமர் மோடி நேற்று ஊர்வலமாக சென்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதற்கிடையே பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் ராஜஸ்தானை சேர்ந்த 28 வயதே ஆகும் பிரபல மிமிக்கிரி நகைச்சுவை கலைஞர் சியாம் ரங்கீலா இன்று அங்கு தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
இதற்கு முன்னதாக நரேந்திர மோடிக்கு எதிராக போட்டியிடுவது குறித்து ஷியாம் ரங்கீலா பேசுகையில், எதிர் வேட்பாளர்கள் இல்லாமல் மோடி தேர்தலில் வெற்றிபெற்றுவிடக்கூடாது என்பதற்காகவே வாரணாசியில் அவருக்கு எதிராக போட்டியிடுவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
comedy artis siyam rangeela nomination in varanasi constituency