பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்.. முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் முதல் கூட்டம்.!! - Seithipunal
Seithipunal


பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அமைப்பின் முதல் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தொடங்குகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால் இங்கு துத்தநாக உருக்காலை, இரும்புத்தாது ஆலை, ஒருங்கிணைத்த எங்கு ஆலை உள்ளிட்ட ஆலைகள் துவங்க முடியாது என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இச்சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் 24 பேர் அடங்கிய பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அதிகார அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. 

இந்நிலையில். வேளாண் மண்டலம் அதிகார அமைப்பின் முதல் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது. இதில் முக்கிய அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், துறை செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். இக்கூட்டத்தில் உணவு பாதுகாப்பிற்கான உட்கட்டமைப்புகளை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள், வேளாண் பாதுகாப்பிற்கான கொள்கைகள், பாசனம் மற்றும் வெள்ள நீர் மேலாண்மை திட்டங்கள், அதை சார்ந்த தொழில்கள் மேம்பாடு ஆகியவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm stalin meeting protected agricultural zonal


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->