கள்ளக்குறிச்சி விவகாரம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.!! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி அருகே கணியாமூர் கிராமத்தில் இயங்கி வந்த தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தைச் சார்ந்த 17 வயது சிறுமி பள்ளி விடுதியில் தங்கி இருந்து பன்னிரண்டாம் வகுப்பு படிந்து வந்தார். கடந்த ஜூலை 13ஆம் தேதி இரவு பள்ளியின் விடுதி மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. 

ஆனால் தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மாணவி தாயார் புகார் தெரிவித்து இருந்தார். அதற்கேற்ற போல பிரதேச பரிசோதனையில் மாணவியின் உடலில் காயங்கள், ஆடைகளில் ரத்த கரைகளும் இருந்தது தெரியவந்தது. இதனால், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். 

அதன்பிறகு மக்கள், மாணவ அமைப்பு என பல்வேறு தரப்பினர் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது காவல்துறையினர் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றதால், போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்திற்குள் இருந்து பேருந்துகளை தீ வைத்து எரித்தும், போலீஸ் வாகனத்தை தீ விபத்து எரித்தும் தனது ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டனர். போராட்டம் வன்முறையாக வெடித்ததால் போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ், தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணிந்தர் ரெட்டி உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இல்லத்தில் இருந்து காணொளி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cm stalin meeting for kallakurichi student death


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->