வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி.! 
                                    
                                    
                                   cm mk stalin thanks to central minister
 
                                 
                               
                                
                                      
                                            ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுப்பிரமணியன் அவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு நன்றி தெரிவித்தார்.
உக்ரைன் நாட்டில் சிக்கித்தவித்த தமிழக மாணவர்கள் உள்ளிட்ட இந்திய மாணவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டதற்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நன்றி தெரிவித்தார்.
                        
இன்று விமான நிலையத்தில் உக்ரைன் நாட்டில் இருந்து திரும்பிய தமிழக மாணவர்கள் கடைசி குழுவினரை நேரில் வரவேற்ற முதலமைச்சர் முக ஸ்டாலின். அதன்பிறகு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுப்பிரமணியன் அவர்களிடத்தில் தொலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு தமிழக மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக திரும்ப நடவடிக்கை மேற்கொண்ட ஒன்றிய அரசுக்கும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்தார்.
                                     
                                 
                   
                       English Summary
                       cm mk stalin thanks to central minister