சாதிவாரிக் கணக்கெடுப்பு ஓகே! ஆனால்... சந்தேகத்தை கிளப்பிய CM ஸ்டாலின்!
CM MK Stalin say about caste census
மத்திய அரசு சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு ஒப்புதல் அளித்தது, திமுகவுக்கும், இண்டி கூட்டணிக்கும் கிடைத்த வெற்றி என முதலவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் அவர் கூறியிருப்பதாவது, “நீண்ட காலமாகத் தவிர்க்கப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பை, மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் இணைத்து நடத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
ஆனால் எப்போது தொடங்கும், எப்போது முடிவடையும் என்ற விவரங்கள் எதுவும் தரப்படவில்லை. முக்கியமான கேள்விகளும் பதில்கள் இன்றி உள்ளன.
பிகார் மாநிலத்தில் சமூகவிதி அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ள நேரத்தில், சாதிவாரிக் கணக்கெடுப்பு ஒரு தேவை என வலியுறுத்தப்பட்டது. கடந்த காலங்களில் இதற்கு எதிராகப் பேசிய பிரதமர் மோடி, இப்போது எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு வணங்கியுள்ளார்.
சமூக நீதி என்பது எண்களின் அடிப்படையில் அறியப்படும். அதற்காகவே இந்தக் கணக்கெடுப்பு அவசியம். உண்மையான சமத்துவத்தை உருவாக்க, சமூக அமைப்பின் நிலையை தெளிவாக அறிந்துகொள்வது முக்கியம்.
இக்கணக்கெடுப்பிற்கான போராட்டத்தில் திமுக முதன்மை வகித்தது. பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது, பிரதமருடன் பலமுறை நேரில் வலியுறுத்தியது. இவை திமுகவின் நீடித்த முயற்சியின் பலன். இது உண்மையில் சமூக நீதி நோக்கிலான வெற்றி" எனத் தெரிவித்துள்ளார்..
English Summary
CM MK Stalin say about caste census