ஆட்சிக்கு வரும் முன் ஒரு பேச்சு! ஆட்சிக்கு வந்த பின் ஒரு பேச்சு! திமுகவை சாடிய அதிமுக நிர்வாகி! - Seithipunal
Seithipunal


புதிய கல்விக் கொள்கையில் திமுகவின் நிலைப்பாடு என்ன?

மத்திய அரசின் புதிய கொள்கையில் திமுக இரட்டை வேடம் போடுவதாக அதிமுகவின் புதுச்சேரி மாநில செயலாளர் ஓம்சக்திசேகர் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "மத்திய அமைச்சர் புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளையும் தரவும் உயர்த்தப்படும் என அறிவித்தார். இதனை புரிந்து கொள்ளாத திமுக நிர்வாகி சிவா எப்போதும் போல் விவகாரத்தில் பொய் மூட்டைகளை அழித்து விட்டுள்ளார். அவர் முதலில் தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சியின் புதிய கல்விக் கொள்கையில் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

தமிழகத்தில் ஆட்சி நடத்தி வரும் திமுக அரசு புதிய கல்வி கொள்கையில் நிலைப்பாடு என்பதை இன்னும் தெளிவு படுத்தவில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒருபோதும் புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்த மாட்டோம் என உறுதி அளித்துவிட்டு மக்களை ஏமாற்றி ஆட்சியைப் பிடித்து விட்டது. தற்பொழுது புதிய கல்வி கொள்கையில் நல்ல அம்சங்கள் இருந்தால் ஏற்றுக் கொள்வோம் என இரட்டை வேடம் போடுகின்றனர். புதிய கல்வி கொள்கையால் வட இந்தியர்கள் புதுச்சேரியை ஆக்கிரமிக்கும் சூழல் நிலவு என குற்றம் சாட்டும் திமுக நிர்வாகி. புதுச்சேரியில் வட இந்தியர் உள்ளே அனுமதிக்க முழுமுதல் காரணமாக இருந்தது கடந்த திமுக- காங்கிரஸ் கூட்டணி அரசுதான்.

மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள முதல்வர் பதவிகளுக்கு குரூப்-பி பணியிடங்கள் 20% வட இந்தியருக்கு வழங்கலாம் என அனுமதி அளித்தது திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் அரசுதான். எனவே இது போன்ற செயல்களை அவரது நிறுத்தி மக்கள் பணியில் ஈடுபட வேண்டும்" என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Clarify DMK position on the new education policy


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->