மகிந்த ராஜபக்சேவிடம் விசாரணை.. கைதாவாரா? - Seithipunal
Seithipunal


இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே ஷ குடும்பமே காரணம் என இலங்கை மக்கள் மற்றும் எதிர் கட்சிகள் குற்றம் சாட்டின. இதையடுத்து, அந்நாட்டு மக்கள் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த போராட்டம் வன்முறையாக மாறி இலங்கையில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. போராட்டத்தின் எதிரொலியாக பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். இதையடுத்து, இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்றார்.

இந்நிலையில், இலங்கையில் மே 9-ஆம் தேதி நடந்த வன்முறை தொடர்பாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பிரதமர் பதவியில் இருந்த மகிந்த ராஜபக்சே விலகுவதற்கு முன்னர், அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறை தொடர்பாக இரண்டு எம்பிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 

இந்த சம்பவம் தொடர்பாக சிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கொழும்பில் உள்ள இல்லத்தில் மகிந்த ராஜபக்சேவிடம் சிஐடி காவல்துறையினர் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். ஏற்கனவே மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேவிடம் விசாரணை நடத்தபட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CID Police Inquiry to Mahinda Rajapaksa


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->