அடிமேல் அடி விடாமல் துரத்தும் வழக்குகள் சிக்கி தவிக்கும் ப.சிதம்பரம்!! - Seithipunal
Seithipunal


ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் ப.சிதம்பரம், சிபிஐ விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

வரும் 19 ஆம் தேதி வரை அவருக்கு நீதிமன்றக் காவலில் வைக்கப்படுவார். இந்நிலையில், ஐஎன்எக்ஸ் முறைகேடு தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் வழங்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். அதேபோல, தன்னை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும் வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்தும் தனியாக ஒரு மனுவை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஐஎன்எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக இந்த மாதத்தின் இறுதியில் சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதேபோல ஐஎன்எக்ஸ் வழக்கில் சட்டவிரோதமாக செய்யப்பட்ட பணப்பரிமாற்றம் தொடர்பாக ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறையும் முடிவு செய்துள்ளது.  இந்த வழக்கில் சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றத்தில் நாளை மனு தாக்கல் செய்யும் என தகவல் வெளியாகியிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chithambaram appeal for bail


கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
Seithipunal