வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் உடலை தாயகம் கொண்டுவர இந்தியத் தூதரகம் வாயிலாக நடவடிக்கை; முதல்வர் விஜய் அறிவிப்பு..!
Chief Minister Vijay will take steps through the Indian Embassy to repatriate the bodies of Tamils who died in the Vietnam boat accident
தெற்கு வியட்நாமில் சுற்றுலாப் படகு ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில், இந்திய சுற்றுலாப் பயணிகளில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
வியட்நாமின் மிகப் பெரிய தீவான பு குவோக் அருகே உள்ள ஹான் மே ரூட் ங்வோய் தீவில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் இந்த படகு கவிழ்ந்ததில், இந்த படகில் 32 இந்திய சுற்றுலாப் பயணிகளும், 04 பணியாளர்களும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த படகில் இருந்த தமிழர்கள் உள்பட இந்திய சுற்றுலாப் பயணிகளில் 15 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு முதல்வர் விஜய் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடலை தமிழகம் கொண்டு வருவதற்கு இந்தியத் தூதரகம் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;
''வியட்நாம் நாட்டின் ஆன் தோய் கடல் பகுதியிலுள்ள ஹான் மே ருட் ங்வோய் (Hon May Rut Ngoai) தீவிற்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் பயணித்த படகு இன்று காலை விபத்தில் சிக்கியதில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும், துயரமும் அடைந்தேன்.
இப்படகு விபத்தில் சிக்கிய தமிழர்களின் விவரங்களைப் பெற்று அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்திடும் வகையில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள், புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரக உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்.
இவ்விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கிட இந்தியத் தூதரக உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டிற்குக்கொண்டுவருவதற்கு இந்தியத் தூதரகம் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Chief Minister Vijay will take steps through the Indian Embassy to repatriate the bodies of Tamils who died in the Vietnam boat accident