வாழ்நாள் துணையை இழந்த பி.டி. உஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்! - ஸ்ரீனிவாசன் மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் ஆழ்ந்த இரங்கல்
Chief Minister Stalin offers condolences PT Usha who lost her life partner TN CM expresses profound grief over demise of Srinivasan
இந்திய விளையாட்டுத் துறையின் அடையாளமாகத் திகழும் பி.டி. உஷாவின் கணவர் சீனிவாசன் மறைவுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உருக்கமான செய்தியில், "இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சகோதரி பி.டி. உஷாவின் கணவர் சீனிவாசன் காலமான செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். தன் வாழ்நாள் துணையை இழந்து வாடும் பி.டி. உஷாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது இதயப்பூர்வமான ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தனது துயரத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
English Summary
Chief Minister Stalin offers condolences PT Usha who lost her life partner TN CM expresses profound grief over demise of Srinivasan