வெளிநாட்டு சுற்றுப்பயணத்தால் தமிழகத்திற்கு ரூ.15,516 கோடி முதலீடு ஈர்ப்பு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


வெளிநாட்டு முதலீடுகளை ஈர்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, பிரிட்டன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணம் மூலம் தமிழகத்திற்கு ரூ.15,516 கோடி முதலீடுகள் கிடைத்துள்ளதாக தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அறிவித்துள்ளார்.

'லண்டனில் இருந்து உற்சாகமான செய்தி. இங்கிலாந்தை தளமாகக் கொண்ட இந்துஜா குழுமம், தமிழகத்தின் மின்சார வாகனச் சூழலில், பேட்டரி சேமிப்பு அமைப்புகளுக்காக ரூ. 7,500 கோடியை முதலீடு செய்யவுள்ளது. இதனால் ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

ஜெர்மனி, பிரிட்டன் பயணம் மூலம் தமிழகத்திற்கு ரூ.15,516 கோடி முதலீடுகள் கிடைத்துள்ளன.இது நமது இளைஞர்களுக்கு 17,613 வேலைவாய்ப்புகளை உருவாக்கும். ஈர்க்கப்பட்ட முதலீடுகள் வெறும் எண்ணிக்கை அல்ல. அவை வாய்ப்புகள், எதிர்காலம் மற்றும் கனவுகள். இது ஆட்சியில் உள்ள திமுகவிற்கு உத்வேகம் அளிக்கும்.' என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chief Minister Stalin announces that foreign tour will attract investment of Rs15516 crore to Tamil Nadu


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->