'உடன்பிறப்பே வா' ஆய்வில் தீவிரம் காட்டும் முதலமைச்சர்...! திமுக உறுப்பினர்களுக்கு வேண்டுகோள்!
Chief Minister shows seriousness in Brothers come investigation Appeal to DMK members
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்திற்கு சட்டசபை தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை அழைத்து ஆலோசித்து வருகிறார்.இதில் தினமும் 3 சட்டசபை தொகுதிகளை சார்ந்த ஒன்றிய நகர பேரூர், பகுதி கழக செயலாளர்கள் மண்டல பொறுப்பாளர்கள் ஆகியோரை அழைத்து தனித்தனியாக தொகுதி நிலவரங்களை கேட்டறிகிறார்.

அவ்வகையில் இதற்கு முன்பாகவே 36 தொகுதிகளை சார்ந்த நிர்வாகிகளிடம் தொகுதி நிலவரங்களை கேட்டறிந்துள்ளார்.மேலும், கட்சி நிர்வாகிகள் செயல்படும் விதம் குறித்தும் எம்.எல்.ஏ.வின் செயல்பாடு குறித்தும் இந்த கள ஆய்வில் கேட்டு இருக்கிறார். இதில் நிர்வாகிகள் செய்யும் தவறுகளையும் புள்ளி விவரத்துடன் சுட்டிக்காட்டுகிறார்.
நடந்து வரும் 'ஓரணியில் தமிழ்நாடு' பிரசார இயக்கத்தை வலுப்படுத்தவும் திமுக உறுப்பினர் சேர்க்கையை மேலும் தீவிரபடுத்தவும் கேட்டுக்கொள்கிறார்.அவ்வகையில் இன்று கொங்கு மண்டலத்திற்கு உட்பட்ட கோபிசெட்டிபாளையம், பெருந்துறை, குன்னூர் ஆகிய சட்டசபை தொகுதிகளை சார்ந்த நிர்வாகிகளை அழைத்து ஆலோசித்தார்.
இதில் தொகுதிகளின் வெற்றி நிலவரம் எந்த வகையிலுள்ளது. மேலும், கட்சி நிர்வாகிகள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்றும் கேட்டறிந்தார்.முக்கியமாக திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறதா? துண்டு பிரசுரங்கள் கொடுக்கிறீர்களா? என்றும் கேட்டறிந்தார். மேலும் தேர்தலுக்கான பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.
English Summary
Chief Minister shows seriousness in Brothers come investigation Appeal to DMK members