தனி ஆளாக போராடிய ஜடேஜா: 03-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை..!
England beat India to win 3rd Test
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 05 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 02 போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் பெற்றது.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான 03-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. லார்ட்ஸில் நடந்த போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தியது.
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களும், 02-வது இன்னிங்ஸில் 192 ரன்களும் எடுத்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 387 ரன்களும், 02வது இன்னிங்ஸில் 170 ரன்களும் எடுத்தது. 05 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.
தனி ஆளாக போராடிய ஜடேஜா 61 ரன்களுடன் இறுதிவரை களத்தில் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர், ஸ்டோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளும், பிரைடன் கார்ஸ் 02 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 04-வது போட்டி 23-ஆம் தேதி மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது.
English Summary
England beat India to win 3rd Test