மும்பையில் விமானம் மீது சரக்கு லாரி மோதி விபத்து: விமான இறக்கையில் சேதம்..!
Cargo truck hits plane in Mumbai damages wing
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகராஜா சர்வதேச விமான நிலையத்தில் ஆகாசா ஏர் விமான நிறுவனத்தின் போயிங் 737-மேக்ஸ் ரக விமானம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதன் மீது சரக்கு லாரி ஒன்று தற்செயலாக மோதியதில் விமானத்தில் வலதுபுற இறக்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் போது பயணிகளுக்கோ அல்லது விமான பணியாளர்களுக்கோ காயம் எதுவும் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விமானத்தில் ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த ஆகாசா ஏர் விமான நிறுவனத்தின் மற்றொரு விமானம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு அதில் இருந்த சரக்குகள் இறக்கப்படுவதற்கு இந்த சரக்கு லாரி பணியில் ஈடுப்பட்டு இருந்துள்ளது.
அப்போது, அந்த லாரியின் ஓட்டுநர் விமானத்தின் இறக்கையின் உயரம் பற்றிய சரியான கணிப்பு இல்லாமல் செயல்பட்டுள்ளார். இதனால், விபத்து ஏற்பட்டுள்ளதாக விமான நிலைய அறிக்கை தெரிவிக்கின்றது.
English Summary
Cargo truck hits plane in Mumbai damages wing