கோவை குண்டுவெடிப்பு குற்றவாளியின் 'தாம்பத்ய உரிமை'க்காக பரோல் வழங்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.! - Seithipunal
Seithipunal


பல காரணங்களுக்காக பரோல் வழங்க விதிகள் இருந்தாலும், ஏற்கனவே குழந்தைகள் இருந்தால் மீண்டும் கருத்தரிப்பு காரணத்தை கூறி பரோல் கோர முடியாது என்று, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் உள்ள தனது கணவருக்கு கருத்தரிப்பு சிகிச்சைக்காக பரோல் வழங்கக் கோரி, அவரின் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து இருந்து இருந்தார்.

இந்த வழக்கில் இன்று தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி,

"அசாதாரண காரணங்களுக்காக பரோல் வழங்க விதிகள் வகை செய்துள்ளது. குழந்தைகள் இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட கைதிக்கு கருத்தரிப்பு சிகிச்சை பெற பரோல் வழங்கலாம்.

ஏற்கனவே குழந்தைகள் இருந்தால் இந்த காரணத்தை கூறி பரோல் கோர முடியாது.

சாதாரண மக்கள் அனுபவிக்கும் சுதந்திரங்களை தண்டனைக் கைதிகள் அனுபவிக்க அனுமதிக்க முடியாது.

அப்படி அனுமதிப்பது சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்கும் குடிமக்களுக்கும், சட்ட விரோதமாக செயல்பட்டவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

எனவே, தாம்பத்ய உரிமைக்காக கைதிகளுக்கு பரோல் வழங்க முடியாது" என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ChennaiHC Parole


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->