இதற்கு 'விடியலே' இல்லையா? தமிழகத்தில் சற்றுமுன் பலியான மேலும் ஒரு உயிர்.! - Seithipunal
Seithipunal


ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் ஒரு உயிர் பலியாகி உள்ளது. 

சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வேதனையில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆன்லைன் ரம்மி ஆட்டத்தில் லட்சக்கணக்கில் அவர் பணத்தை இழந்து, மேலும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, தற்கொலை செய்து கொண்டுள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

தற்கொலை செய்து கொண்ட இளைஞர் தினேஷ், சென்னை சின்மயா நகரில் பிரவுசிங் சென்டர் நடத்தி வந்துள்ளார் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

மேலும் தற்கொலை செய்துகொண்ட தினேஷின் செல்போனை கைப்பற்றிய போலீசார், சைபர் கிரைம் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்கனவே பெருங்குடியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சீரழிந்த நிலையில், மேலும் ஒரு தற்கொலை சம்பவம் அரங்கேறி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai one more suicide for online rummy game


கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,
Seithipunal