#BigBreaking || இந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் எப்படி ஒழுக்கக்கல்வி நடத்துவார்கள்? சாட்டையை சுழற்றும் நீதிபதி எஸ் எம் சுப்ரமணியம்.!
Chennai HC Division justise Ask About Teacher Transfer issue
ஐபிஎல் ஏலம் போன்று ஆசிரியர் பணியிட மாறுதல் ஏற்படுகிறதா? 10 லட்சம் ரூபாய் முதல் கொடுத்து பணியிடமாறுதல் பெற்றவர்கள் மாணவர்களுக்கு எந்த வகையில் ஒழுக்க கல்வியை கற்பிப்பார்கள்? என்று, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி எஸ் எம் சுப்ரமணியம் கேள்வி எழுப்பி உள்ளார்.

இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு தொடர்பான வழக்கு விசாரணையின்போது, மனுதாரர் தரப்பில்,
"லஞ்சம் கொடுப்பதன் அடிப்படையில் மட்டுமே அரசு பள்ளி ஆசிரியர்கள் கலந்தாய்வு மூலமாக இடமாறுதல் செய்யப்படுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு இடம் மாறுவதற்காக ஆசிரியர்கள் 10 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது. கலந்தாய்வில் வெளிப்படை தன்மை கிடையாது" என்று தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதி சுப்பிரமணியம் அவர்கள்,
"இதுபோன்ற பல்வேறு வழக்குகளில் ஆசிரியர் பணியிடை மாற்றத்தின்போது நேர்மையான முறையில் நடைபெறவில்லை என்று தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் போல ஆசிரியர் பணியிடமாற்றங்களுக்கு லட்சக்கணக்கில் ஏலம் விடப்படுகிறதா?
10 லட்சம் ரூபாய் முதல் கொடுத்து பணியிடமாறுதல் பெற்றவர்கள் மாணவர்களுக்கு எந்த வகையில் ஒழுக்க கல்வியை கற்பிப்பார்கள்? இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர், லஞ்ச ஒழிப்பு பிரிவு இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டு நீதிபதி சுப்பிரமணியம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
English Summary
Chennai HC Division justise Ask About Teacher Transfer issue