சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஆயிரத்து 374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3 ஆயிரத்து 843 நகராட்சி உறுப்பினர்கள், 7 ஆயிரத்து 621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 838 பதவிகளுக்கு வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் ஆகும். குறுகிய காலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்புமனுதாக்கல் தொடங்கியதால், கூட்டணி கட்சிகளுக்கு இடப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு போன்றவற்றை விரைந்து அனைத்து கட்சிகளும் மேற்கொண்டுவருகின்றனர். 

இடப்பங்கீடு பங்கீட்டில் கூட்டணி கட்சிகள் இடையே இழுபறி நீடித்ததால், இடப் பங்கீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதன்காரணமாக நேற்று வரை ஒரு சில கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டனர்.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் 16 வார்டுகளுக்கான காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 6-வது வார்டு எம். சாமுவேல் திரவியம், 22-வது வார்டு அ. தீர்த்தி, 50-வது வார்டு ரா. சுரேஷ்குமார், 37-வது வார்டு ஜெ. டில்லிபாபு, 63-வது வார்டு சிவ.ராஜசேகரன், 109-வது வார்டு எ. சுகன்யா, 96-வது வார்டு எஸ். தனலட்சுமி, 77-வது வார்டு சுமதி, 170-வது வார்டு எம்.ஏ. முத்தழகன், 134-வது வார்டு சுசீலா கோபாலகிருஷ்ணன், 173-வது வார்டு டி. சுபாஷினி, 126-வது வார்டு அமிர்த வர்ஷினி, 165-வது வார்டு நாஞ்சில் வி. ஈஸ்வரபிரசாத், 79-வது வார்டு மோ. பானுபிரியா, 92-வது வார்டு ஜி. முரளி, 31-வது வார்டு பி. சங்கீதா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chennai congress candidate list


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->