குற்றவாளியை படம் எடுத்த கேமராவை உடைப்பேன்! பத்திரிகையாளர்களை மிரட்டிய காவல்துறை! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ! - Seithipunal
Seithipunal


சென்னை: பரங்கிமலை காவலா் குடியிருப்பில் வசித்த கல்லூரி மாணவி சத்யபிரியா என்ற மாணவி காதலிக்க மறுத்ததால், அதே குடியிருப்பில் வசித்த சதீஷ் என்ற இளைஞர், பரங்கிமலை ரயில் நிலையத்தில், தாம்பரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த மின்சார ரயில் முன் தள்ளி விட்டு கொலை செய்தார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு அக். 13-ஆம் தேதி நடந்த இந்த வழக்கில் குற்றவாளி சதீஷை கைது செய்து சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

வழக்கின் விசாரணை சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிா் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி முன் நடைபெற்று வந்த நிலையில், இரு தினங்களுக்கு முன் சதிஷ் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், சென்னை மகளிா் சிறப்பு நீதிமன்றம் இன்று குற்றவாளி சதிஷிற்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்தபிறகு அவரை இரு முறை தூக்கிலிட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, குற்றவாளி சதீஷை நீதிமன்ற வளாகத்தில் வைத்து செய்தியாளர்கள் புகைப்படம் எடுக்க முயன்ற போது, காவல்துறை தடுத்து நிறுத்தி கேமராவை உடைப்பேன் என்று மிரட்டல் விடுத்த கனலோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Allikulam Court TN Police Press reporter clash viral video


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->