சாதிவாரிக் கணக்கெடுப்பு: திமுக, காங்கிரஸின் முகத்திரை கிழிந்துவிட்டது - மத்திய அமைச்சர் கடும் தாக்கு!
Central Minister Caste census DMK Congress
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள அறிக்கையில், "நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது பெரும் வரவேற்புக்குரியது. இதன் மூலம் ஒடுக்கப்பட்ட, பிற்பட்ட, விளிம்பு நிலை மக்களின் சமூக, பொருளாதார சூழல் அறிந்து அதற்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க முடியும். மத்திய அரசின் இந்த நடவடிக்கை சமூக மாற்றத்திற்கு உதவிகரமாக இருக்கும்.
இதற்காக மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேசமயம் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அரசியல் நாடகம் தற்போது முடிவுக்கு வந்து விட்டது.
சொந்த நலன், குடும்ப நலன் மட்டுமே குறிக்கோளாக கொண்டு குடும்ப ஆட்சி நடத்தி வரும் இண்டி கூட்டணி கட்சி தலைவர்களுக்கு மக்களை பற்றி ஒருபோதும் கவலை இல்லை.
பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்கனவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியுள்ள போதிலும் தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் இதற்கு மறுப்பு தெரிவித்து வந்தார். மத்திய அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியும் என்று போலி நாடகம் நடத்தி வந்தார்.
அதுபோலவே சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்து வந்த காங்கிரஸ் கட்சி 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை, மாறாக அதை எதிர்த்தே வந்துள்ளது.கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற போலி நாடகத்தை நடத்தியது. ஆனால் அந்த கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் இது நடத்தப்படவில்லை.
தற்போது மத்திய அரசே சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளதன் மூலம் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் முகத்திரை கிழிந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Central Minister Caste census DMK Congress