PM மோடி தலைமையில் கூடுகிறது அணைத்து கட்சி கூட்டம்!
Central government all-party meeting Monsoon Session 2025
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக, ஜூலை 19ஆம் தேதி அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த கூட்டத்துக்கு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு தலைமை வகிக்கிறார்.
மழைக்காலக் கூட்டத் தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறவுள்ளது. இதில், சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் கூட்டம் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்க்கட்சிகள் கடந்த சில வாரங்களாக, ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் தொடர்பாக விரிவான விவாதம் நடத்த வேண்டுமென வலியுறுத்தி வந்தன. இதனையடுத்து, இம்முறை கூட்டத் தொடர் அறிவிப்பு முன்கூட்டியே, கடந்த ஜூன் 4ஆம் தேதி வெளியிடப்பட்டது.
மழைக்காலக் கூட்டத்தொடரில் முக்கியமான சட்டமசோதாக்கள், புதிய சட்டங்கள் மற்றும் நாட்டின் நலனுக்கான தீர்மானங்கள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை முன்னிட்டு, ஒட்டுமொத்தமாக எல்லா அரசியல் கட்சிகளின் பார்வைகளையும் தெரிந்து கொள்வதற்காகவே ஜூலை 19ஆம் தேதியில் முன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
English Summary
Central government all-party meeting Monsoon Session 2025