விமான நிலையத்தில் இடையூறு... தடுப்புகள் உடைத்ததாக த.வெ.க தொண்டர்கள் மீது வழக்கு பதிவு...! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு நடத்தும் பணியில் தற்போது  ஈடுபட்டு வருகிறார். இதில், முதல்கட்டமாக கோவை,திருப்பூர், நாமக்கல், நீலகிரி, ஈரோடு, கரூர், சேலம் ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த முகவர்களுக்கான கருத்தரங்கு நடத்த முடிவு செய்யப்பட்டது.

அவ்வகையில், கோவை மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்களுக்கான 2 நாள் கருத்தரங்கு நேற்று கோவை அருகே குரும்பபாளையத்திலுள்ள தனியார் கல்லூரி அரங்கில் தொடங்கியது.

மேலும்,கருத்தரங்கில் கட்டுக்கடங்காத கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்றார்.இதில்,அக்கட்சித் தொண்டர்களின் கூட்டத்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், தவெக கருத்தரங்கில் பங்கேற்க விஜய் வந்த போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, தவெக தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், விமான நிலையத்திற்குள் பயணிகளுக்கு இடையூறு கொடுத்தது, தடுப்புகள் உடைத்தது போன்ற சம்பவங்களுக்காகவும் காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, கார், பைக் உள்பட 133 வாகனங்கள் மீது வழக்குப்பதிவுசெய்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Case registered against TRP workers for disrupting airport breaking barricades


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->