நிதி அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான பொதுநல மனு வாபஸ்: சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி!
Bribery Case Petition Against Finance Minister Mariya Wilson Withdrawn in Madras HC
கடந்த திமுக ஆட்சியில் பள்ளிகளுக்கு அனுமதி பெற லஞ்சம் வழங்கப்பட்டதற்குத் தானே நேரடி சாட்சி என்று நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி சட்டமன்றத்தில் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார்.
இதன் அடிப்படையில், லஞ்சம் கொடுத்ததும் குற்றம் என்பதால் அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் கே.சிவசுப்பிரமணியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
சட்டமன்றத்தில் அமைச்சர் பேசியதை வெறும் அரசியல் பேச்சாகப் புறந்தள்ளிவிட முடியாது என்றும், லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், நிதி அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, அதனைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
English Summary
Bribery Case Petition Against Finance Minister Mariya Wilson Withdrawn in Madras HC