உச்ச நீதிமன்றம் நோக்கி 'ஜனநாயகத்துக்கான பேரணி'; ராகுல், நேஹா உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..! - Seithipunal
Seithipunal


தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, இண்டியா கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உச்ச நீதிமன்றத்தை நோக்கிய பேரணி சென்ற நிலையில், மத்திய டெல்லி பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த   இந்த 'ஜனநாயகத்துக்கான பேரணி', டெல்லியின் முக்கியப் பகுதிகளான பரகம்பா சாலை மற்றும் மண்டி ஹவுஸ் ஆகியஇடங்களில் கடுமையாக போக்குவரத்து முடங்கியது.

இந்தப் பேரணியில் அகில இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர் நேஹா போராவும் பங்கேற்றார். இண்டியா கூட்டணியின் தலைவர்கள் முதலில் பரகம்பா சாலை சந்திப்பில் கூடினர். அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்தை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். அங்கு, எஸ்ஐஆர் பணியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த மனுவைச் சமர்ப்பிக்கவும், ஞானேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அப்போது காங்கிரஸ் எம்.பி. அமரிந்தர் சிங் ராஜா வாரிங், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்தை சந்திக்க கோரிக்கை விடுத்தார். அப்போது ''இந்தியத் தலைமை நீதிபதி எங்களைச் சந்திக்காவிட்டால், மக்களின் குறைகளை யார் கேட்பார்கள்? அவர் எங்களைச் சந்திக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்" என்று கூறினார்.

நேற்று தலைமை நீதிபதி சூர்ய காந்த், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கோரியிருந்த சந்திப்புக்கான வேண்டுகோளை நிராகரித்தார்.

அதாவது, இந்த எஸ்ஐஆர் விவகாரங்கள் ஏற்கெனவே, உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனையில் இருப்பதால் இந்தச் சந்திப்பு மறுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், நிர்வாக ரீதியிலான அரசின் செயல்பாடுகள் மற்றும் ஆளுகை தொடர்பான விஷயங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thousands including Rahul and Neha participate in a rally towards the Supreme Court


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




சினிமா

Seithipunal
--> -->