''மருத்துவப் பணியாளர்கள் போராடியபோது அவர்களை கொடூரமான முறையில் காவல் துறை கையாண்டது.'' எழிலன் குற்றச்சாட்டு..! - Seithipunal
Seithipunal


''ஓர் அரசு எப்படி செயல்படப் போகிறது என்பதன் முன்னோட்டமாக தவெக அரசின் முதல் 100 நாட்களின் அணுகுமுறையப் பார்த்தாலே தெரிகிறது. செவிலியர்கள் போராட்டத்தில் பேச்சுவார்த்தை எனக் கூறி கைது செய்தனர்.

இன்று மருத்துவப் பணியாளர்கள் போராடியபோது அவர்களை கொடூரமான முறையில் காவல் துறை கையாண்டது.'' என திமுக மருத்துவர் அணிச் செயலாளர் எழிலன் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது; மருத்துவப் பணியாளர்களை கைது செய்ததற்கு கடும் கண்டனத்துக்குரியது. போராடுபவர்களை ஒடுக்குகிறது தவெக அரசு. போலீஸார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஓர் அரசு எப்படி செயல்படப் போகிறது என்பதன் முன்னோட்டமாக தவெக அரசின் முதல் 100 நாட்களின் அணுகுமுறையப் பார்த்தாலே தெரிகிறது என்றும், செவிலியர்கள் போராட்டத்தில் பேச்சுவார்த்தை எனக் கூறி கைது செய்தனர் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று மருத்துவப் பணியாளர்கள் போராடியபோது அவர்களை கொடூரமான முறையில் காவல் துறை கையாண்டது என்று குற்றம் சுமத்தியதோடு, இதற்கு திமுக தனது வலுவான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், தன்னுடைய கொள்கை எதிரி பாஜக எனக் கூறிக் கொண்டு, சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் பாஜக-வுக்கு எதிராக குரல் எழுப்பவிடாமல் தடுத்து, சென்னையில் போராடியவர்களை கைது செய்திருக்கின்றது இந்த தவெக அரசு என்று கூறியுள்ளார்.

முதல்வர் விஜய் மாற்றத்தை கொண்டு வருவார் என எதிர்பார்த்த மக்களுக்கு போராட்டக் களங்கள் ஏமாற்றமாக அமைந்துள்ளது என்றும், கடந்த கால இடைத்தேர்தல்களில் அதிகளவு வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும். ஆனால் தற்போது, இதுபோன்ற சூழல் இல்லை. ஆனால், விஜய் என்ற ஒரு நடிகர் திரையில் பேசியதற்கும், முதல்வர் விஜய்யின் நிர்வாகத் திறனையும் மக்கள் பிரித்துப் பார்க்க தொடங்கிவிட்டார்களா..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், திமுக ஆட்சியில் பல்வேறு போராட்டக் களங்களில் போராடும் பணியாளர்களிடம் துறை சார்ந்த அதிகாரிகள், அமைச்சர்கள் பேசுவார்கள். அதன்பின் சூழ்நிலையைப் பொறுத்து போராட்டக்காரர்களுக்கு விளக்கி கோரிக்கையை நிறைவேற்றுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், தவெக ஆட்சியில் போராட்டக்காரர்களை முன்கூட்டியே கைது செய்வது, வீட்டுக் காவலில் வைப்பது, கழிவறைக்குச் செல்பவர்கள், தேநீர் கடையில் வைத்து கைது என நடவடிக்கை எடுக்கிறார்கள். இது குறித்து கியூட் சிஎம் சார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவ பணியாளர்கள் விவகாரத்தில், தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லியதை செய்ய முடியவில்லை என தவெக அரசு வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றும், போராட்டக் களங்களை பொறுத்தவரையில், திமுக ஆட்சி காலங்களில் சுமுகமான தீர்வு கிடைத்துள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ezhilan has alleged that the police handled medical personnel brutally when they were protesting


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




சினிமா

Seithipunal
--> -->