பாஜக 47வது ஆண்டு விழா...! 'தமிழகத்தை தலைநிமிரச் செய்வோம்'...! - நயினார் நாகேந்திரன் உறுதி மொழி - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவின் மூலம் உற்சாகமான செய்தியை பகிர்ந்துள்ளார். அதில் அவர், “பாரதத் திருநாட்டின் முன்னேற்றமே எங்களின் முதன்மை நோக்கம்” என வலியுறுத்தியுள்ளார்.

உலகளவில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் இயக்கங்களில் ஒன்றாக திகழும் பாரதிய ஜனதா கட்சி இன்று தனது 47-ஆவது ஆண்டு பயணத்தில் அடியெடுத்து வைப்பது பெருமைக்குரிய தருணமாகும் என தெரிவித்துள்ளார்.

மேலும், சியாமா பிரசாத் முகர்ஜி மற்றும் தீனதயாள் உபாத்யாய் விதைத்த சிறிய விதை இன்று வலுவான மரமாக வளர்ந்து, நாட்டின் வளர்ச்சி, ஜனநாயக வலிமை, பண்பாட்டு பாதுகாப்பு ஆகிய துறைகளில் பல தலைவர்களை உருவாக்கியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவின் நிறுவன தினத்தை முன்னிட்டு, தமிழக பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்ய இருப்பது, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கான அடித்தளத்தை மேலும் பலப்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“முதலில் தேசம், அடுத்து கட்சி, கடைசியில் தனிநபர்” என்ற கொள்கையில் உறுதியாக நின்று, தேசிய ஜனநாயகக் கூட்டணியை வெற்றி பெறச் செய்து, தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்று, தலைநிமிரச் செய்வோம் என இந்நன்னாளில் அனைவரும் உறுதி ஏற்போம் என அவர் தனது பதிவில் தெரிவிக்கப்படுகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJPs 47th anniversary We make Tamil Nadu proud Nainar Nagendran promise


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->