டெல்லியை குறிவைத்த பயங்கரவாத சதி முறியடிப்பு...! - மும்பையில் பதுங்கியிருந்த 2 தீவிரவாதிகள் கைது...! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியை குறிவைத்து பெரிய அளவிலான பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக காவலர்களுக்கு கிடைத்த ரகசிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த தகவலை தொடர்ந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்ட காவலர்கள், மராட்டிய மாநிலம் மும்பையில் இரண்டு பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது கண்டறிந்தனர்.

மேலும் அவர்கள் டெல்லியில் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்த திட்டமிட்டு வந்ததும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது.

இதையடுத்து, மராட்டிய மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு காவலர்களுடன் இணைந்து நடத்திய கூட்டு அதிரடி நடவடிக்கையில், ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய இரு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

முசாப் அகமது மற்றும் முகமது ஹமது என அடையாளம் காணப்பட்ட இவர்கள், மும்பையிலிருந்து டெல்லி சென்று அங்கு தாக்குதல் நடத்த தீவிரமாக திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட இருவரிடமும் புலனாய்வு அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Terrorist plot targeting Delhi foiled 2 terrorists hiding Mumbai arrested


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->