பா.ஜ.க. வாக்காளர் பட்டியல் திருத்தத்தை ஆயுதமாக்குகிறது...! - சீமான் கடும் குற்றச்சாட்டு...!
BJP weaponizing revision voter list Seeman makes strong accusation
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை எதிர்த்து கருத்து தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.அவர் தனது உரையில் கடுமையாக விமர்சித்து தெரிவித்ததாவது,"தமிழகத்தில் குடியேறி வாழும் இந்தி பேசும் மக்கள் குறித்த எந்தத் தரவுகளும் தமிழக அரசிடம் இல்லை.

இதுவே மிகப் பெரிய நிர்வாக குறைபாடு.பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் தான் இப்போது வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் திட்டமிட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இந்த முயற்சியின் மூலம் பா.ஜ.க. தனது ஆதரவாளர்களை தமிழகத்தில் குடியமர்த்தி, வாக்கு சமநிலையை மாற்றும் அரசியல் முயற்சி நடத்துகிறது.இந்தியைக் திணித்தால் எதிர்ப்பாய்,ஆனால் இந்தி காரரை திணித்தால் என்ன செய்வாய்? எனக் கேள்வி எழுப்பி,தமிழகத்தின் அரசியல் மற்றும் கலாச்சார அடையாளத்தை காப்பது அவசியம் என சீமான் வலியுறுத்தினார்.
English Summary
BJP weaponizing revision voter list Seeman makes strong accusation