தமிழக அரசியலில் திடீர் திருப்பம்.. சசிகலாவை சந்தித்த பாஜகவின் முக்கிய புள்ளி.!! - Seithipunal
Seithipunal


தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக விசாரிப்பதற்காக பாஜக எம்பி சந்தியா ராய், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர்கள் நடிகை விஜயசாந்தி, சித்ரா தாய் வாக் ஆகியோர் அடங்கிய குழுவை பாஜக தேசியத் தலைமையின் நியமித்தது. இந்த குழு அரியலூர், தஞ்சாவூருக்கு நேற்று முன்தினம் சென்று விசாரணை நடத்தியது. இந்த பணிகளை முடித்துக்கொண்டு விஜயசாந்தி நேற்று சென்னை திரும்பினார். 

இந்நிலையில், சென்னை திரும்பி விஜயசாந்தி, தியாகராயநகரில் உள்ள சசிகலா இல்லத்திற்கு சென்று சசிகலாவை சந்தித்துப் பேசினார். சசிகலாவை சந்தித்த பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, எப்போது சென்னை வந்தாலும் நான் சசிகலாவை சந்திப்பேன். எங்கள் நட்பு எப்போதும் போல் தொடரும். நான் அவர்கள் வீட்டு பெண். ஜெயலலிதா, சசிகலா என இருவரையுமே எனக்கு மிகவும் பிடிக்கும். 

தமிழகத்துக்கு வந்த பணிகள் எல்லாம் முடிந்து விட்டன. ஆகையால், தான் இறுதியாக சசிகலாவை சந்தித்தேன். அரசியல் ரீதியாக சசிகலாவிடம் நான் எதுவும் பேசவில்லை. நட்பு ரீதியில் மட்டுமே இந்த சந்திப்பு நடைபெற்றது. அரசியலை பொறுத்தவரை மக்களுக்கு யார் யார் நல்லது செய்கிறார்களோ, அவர்களுக்கு நல்லது நடக்கும். தமிழகத்தை பொறுத்தவரை ஜெயலலிதா தற்போது இருந்தால் நல்லது நடந்திருக்கும்.  அரசியலில் ஜெயலலிதா, சசிகலா என இருவருமே கஷ்டப்பட்டு வந்தார்கள். அரசியலில் நாளை எது வேண்டுமானாலும் நடக்கலாம். அது நல்லதாகவே நடக்கும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp vijayashanthi meet sasikala


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->