கூப்பிட்டுவச்சு அசிங்கப்படுத்துறீங்களா..?? ஆளுநர் ஆர்.என் ரவிக்காக பொங்கிய வானதி..!! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என் ரவி வெளியேறிய விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 2023ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அரசின் உரையில் சில பகுதிகளை வாசிக்காமல் தவிர்த்ததற்கு எதிராக முதல்வர் மு.க ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் வாசித்துக் கொண்டிருக்கும் பொழுதே ஆளுநர் தமிழக சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறினார். 

எனினும் முதல்வர் மு.க ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் சட்டப்பேரவையில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் ஆர்.என் ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறும் பொழுது காங்கிரஸ் எம்எல்ஏக்கள் "தமிழ்நாடு வாழ்க" என கோஷம் எழுப்பினர். அதேபோன்று பாஜக எம்எல்ஏக்கள் "பாரத் மாதா கி ஜே" மற்றும் "ஜெய் ஹிந்த்" என கோஷம் எழுப்பினர். 

இதனை அடுத்து சட்டப்பேரவையில் இருந்து வெளியே வந்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது "அரசு சிந்தாதத்தை புகழ் பாடக்கூடிய ஒருவராக ஆளுநர் இருக்க முடியாது. ஆளுநர் அப்படி இருக்க வேண்டும் என்று ஆளும் அரசு நினைக்க முடியாது. ஆளுநரை கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்துறீங்களா..?? நீங்கள் சொல்வதை தான் பேச வேண்டுமா..?? இல்லையென்றால் ஆளுநரை அவமானப்படுத்துகிறீர்களா..??" என ஆளுநருக்கு ஆதரவாக ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Vanathi against DMK govt action on Governor RN RAVI


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->