முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதி..!
Former Vice President Jagdeep Dhankhar admitted to the hospital
இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், இரண்டு முறை சுயநினைவை இழந்ததால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமையன்று கழிவறைக்கு சென்ற போது தன்கருக்கு இரண்டுமுறை மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் மருத்துவமனைக்கு அவர், அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மேல் பரிசோதனைக்காக அவரை அங்கேயே அனுமதிக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து அவர், இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், இதுகுறித்து தன்கர் தரப்பிலிருந்தோ, அவரது குடும்பத்தினரிடமிருந்தோ இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்படவில்லை. கடந்த ஆண்டு ஜூலை 21 ஆம் தேதி, உடல்நலக் காரணங்களைக் கூறி, துணைத் தலைவர் பதவியிலிருந்து தன்கர் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Former Vice President Jagdeep Dhankhar admitted to the hospital