நீண்ட நாள் காதலியுடன் ஷிகர் தவானுக்கு நிச்சயதார்த்தம்; அடுத்த மாதம் டும்.. டும்..டும்..!
Shikhar Dhawan gets engaged to his long time girlfriend
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஷிகர் தவான், தனது நீண்டகால காதலியான அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த சோஃபி ஷைனுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஷிகர் தவான்-சோஃபி இருவருக்கும் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெறவுள்ளது. இந்தத் திருமணம் டெல்லி-என்சிஆர் பகுதியில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் மட்டுமே பங்கேற்கும் ஒரு தனியார் நிகழ்வாக நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல ஆண்டுகளுக்கு முன் துபாயில் சந்தித்த இவர்களுக்கு இடையே முதலில் நண்பர்களாக இருந்து, பின்னர் காதலாக மாறிய நிலையில், 2025 மே மாதம் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்த சோஃபி ஷைன், அமெரிக்காவைச் சேர்ந்த நிதிச் சேவை நிறுவனமான 'நார்தர்ன் டிரஸ்ட் கார்ப்பரேஷன்'-இல் இரண்டாம் துணைத் தலைவராக உள்ளார். அத்துடன், ஷிகர் தவானின் 'டா ஒன் ஸ்போர்ட்ஸ்' நிறுவனத்தின் தொண்டுப் பிரிவான 'ஷிகர் தவான் ஃபவுண்டேஷன்' அமைப்பின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
ஷிகர் தவான் முன்னதாக 2012-இல் ஆயிஷா முகர்ஜியை திருமணம் செய்தார். இவர்களுக்கு சோராவர் என்ற மகன் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக 2021-இல் பிரிந்த இவர்களுக்கு, அக்டோபர் 2023-இல் டெல்லி நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.
இந்நிலையில், அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த சோஃபி ஷைனுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டுள்ளார். இருவரும் தங்கள் நிச்சயதார்த்தத்தை இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களுடன் அறிவித்துள்ளனர்.
English Summary
Shikhar Dhawan gets engaged to his long time girlfriend