அரசியல் களத்தில் ஓரங்கட்டப்பட்டுள்ள விரக்தி; குலதெய்வம் கோவிலுக்கு சென்ற ஓபிஎஸ்..!
In frustration at being sidelined in the political arena OPS visited his family deitys temple
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் களத்தில் மும்முரமாக இறங்கி வேலை செய்து வருகின்றன. வரும் சட்டமன்ற தேர்தலை அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவுள்ளது.
இந்த நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த சூழலில், அதிமுக மற்றும் பாஜ தலைமை ஓபிஎஸ்சை கண்டுகொள்ளாத நிலையில் அவர் விரக்தியான மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஓ. பன்னீர்செல்வம், அரசியலில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மற்றும் குலதெய்வம் கோயிலில் வழிபடுவது வழக்கமாக கொண்டுள்ளார். இதன்படி அவர், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு இன்று காலை அவருடைய ஆதரவாளர்களும் சென்றுள்ளார்.
கோயிலில் தரிசனம் செய்த ஓ.பன்னீர்செல்வம், அதன்பின் ஆண்டாள் பிறந்த நந்தவனம், பெரியபெருமாள் சன்னதிக்கும் சென்று வழிபாடு செய்துள்ளார். இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள தனது குலதெய்வம் கோயிலான செண்பகத்தோப்பு வனப்பேச்சியம்மன் கோயிலுக்கும் சென்றார். அங்கும் தரிசனம் செய்துள்ளார்.
English Summary
In frustration at being sidelined in the political arena OPS visited his family deitys temple