திருச்சி கொடூரம்.. திமுகவினரின் பாலியல் வெறிக்கு இன்னும் எத்தனை தமிழ்ப் பெண்கள் பலியாக வேண்டும்? கொந்தளிக்கும் வானதி சீனிவாசன்!
BJP Vanathi Srinivasan Condemn to DMK CM MK Stalin
பாஜக தேசிய மகளிரணி தலைவியும், எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "திருச்சி திமுக வட்டச் செயலாளர் காளை உள்ளிட்ட 15 பேரால், 14 வயது சிறுமி ஒருவர் தொடர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பதாகவும், அக்கொடூரத்தின் வினையாக அக்குழந்தை ஒரு குழந்தையை பெற்றெடுத்திருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன. பள்ளிப்படிப்பைக் கூட தாண்டாத ஒரு பெண் குழந்தையை தங்களின் பாலியல் இச்சைக்கு பலியாக்கிக் கொண்ட அந்த மிருகங்களை இத்தனை ஆண்டுகளாக பாதுகாப்பாக அடைகாத்து வந்த திமுக அரசு தமிழகத்தின் அவமானச் சின்னம்.
பள்ளி மாணவர்கள் கஞ்சா போதையில் மிதக்கிறார்கள், பள்ளி மாணவிகள் பாலியல் கரங்களில் சிக்கி சீரழிகிறார்கள், தமிழகப் பிள்ளைகள் தன்னை அப்பா என்றழைப்பதாக உருகும் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது பிள்ளைகளை பாதுகாக்கும் லட்சணம் இதுதானா? சென்னை ஞானசேகர், அரக்கோணம் தெய்வச்செயல், திருச்சி காளை போன்று பெண்களைக் குறிவைத்து வேட்டையாடும் இன்னும் எத்தனை மிருகங்களை திமுக தன் கூடாரத்திற்குள் தீனி போட்டு வளர்த்துக் கொண்டிருக்கிறது?
திமுக காமுகர்களைக் கண்டு தமிழகப் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சி நடுங்குகையில், கொஞ்சம் கூட கூச்சமேயில்லாமல் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்ற விழா எடுப்பதற்கு திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும். இப்படிப்பட்ட ஒரு பெண்கள் விரோத ஆட்சியை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்கவும் மாட்டார்கள், இனியொரு முறை அரியணையில் அமர்த்தவும் மாட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Vanathi Srinivasan Condemn to DMK CM MK Stalin