அவதூறு வழக்கில் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யாவுக்கு ஜாமினில்.!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் பெண்ணாடம் பேரூராட்சி 12வது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் விஸ்வநாதன் மலம் கலந்த நீரில் தூய்மை பணியாளரை கட்டாயப்படுத்தி வேலை செய்ய சொன்னதால் ஒவ்வாமை ஏற்பட்டு அவர் இறந்துவிட்டதாக பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த ஜூன் 7-ம் தேதி பதிவிட்டார். இதனைக் கண்டு கொள்ளாமல் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கள்ளமௌனம் காக்கிறார் என எஸ்.ஜி.சூர்யா குற்றம் சாட்டி இருந்தார்

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 12ம் தேதி மதுரை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் அவதூறு செய்திகளை பரப்புவதாக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் ஜூன் 16ம் தேதி சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து மதுரை சைபர் கிரைம் போலீசார் எஸ்.ஜி சூர்யாவை கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் எஸ்.ஜி சூர்யா ஆஜர்படுத்தப்பட்ட போது எஸ்.ஜி.சூர்யாவை ஜூலை 1-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மதுரை மாவட்ட முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதி ராம் சங்கரன் உத்தரவிட்டார்.

இந்நிலையில் எஸ்.ஜி சூர்யா தரப்பில் ஜாமின் கோரிய வழக்கு மதுரை மாவட்ட முதலாவது விரைவு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணையின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சூர்யாவிற்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்தும், காவலில் எடுத்து அனுமதி அளிக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டீலா பானு எஸ்.ஜி.சூர்யாவுக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டார். இதனால் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா ஜாமினில் விடுதலையாக உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP state secretary SG Surya on bail in defamation case!


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->