அண்ணாமலைக்கு தகுதி இல்லை என்று சொல்வதற்கு ஜெயக்குமார் யார்? - நாராயணன் திருப்பதி கட்டம்.! - Seithipunal
Seithipunal


அண்ணாமலைக்கு தகுதி இல்லை என்று சொல்வதற்கு ஜெயக்குமார் யார்? - நாராயணன் திருப்பதி கட்டம்.!

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "பலமுறை எச்சரித்தும் அண்ணாமலை அலட்சியப்படுத்துகிறார். பாஜகவுடன் தற்போது அதிமுக கூட்டணியில் இல்லை.

இது தான் அதிமுக கட்சியின் நிலைப்பாடு. கூட்டணி முறிவால் அதிமுகவுக்கு இழப்பு எதுவும் இல்லை. தேர்தல் வரும் போது தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். 

இனிமேல் அண்ணாமலை எங்கள் தலைவர்களை பற்றி விமர்சனம் செய்தால் கடுமையான அளவுக்கு விமர்சனங்களை சந்திக்க நேரிடும்" என்று எச்சரிகை விடுத்து பேசியுள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி, ''இப்போது கூட்டணி இல்லை. தேர்தல் காலத்தில் தான் கூட்டணி. கொள்கையில் ஒத்துப்போக வேண்டிய அவசியம் இல்லை. 

அண்ணாமலை குறித்து ஜெயக்குமார் பேசியது முற்றிலும் தவறானது. அண்ணாமலை தலைவராக இருக்க தகுதி இல்லை என்று சொல்வதற்கு ஜெயக்குமார் யார்?" என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP response to AIADMK Jayakumar comments on Annamalai


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?Advertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?
Seithipunal
--> -->