பாஜக அலுவலகம் மீதான பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தை என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டும் - பாஜக அண்ணாமலை.! - Seithipunal
Seithipunal


சென்னை தி.நகர் பகுதியில் உள்ள மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் நல்ல ரீதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று மதுபாட்டில்கள் மூலம் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு உள்ளது. குறித்து தகவல் அறிந்த துணை ஆணையர் தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும் பாஜக தலைமை அலுவலத்தில் கதவுகள் மூடப்பட்டிருந்ததால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பெட்ரோல் குண்டு வீசப்பட்டது எடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் வினோத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தை தேசிய புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும் என தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் பெட்ரோல் குண்டு வீசிய இடத்தில் தடையங்கள் சேகரிக்கவும் எப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கு முன்பாகவும் சம்பவ இடத்தை காவல்துறையை சுத்தப்படுத்து ஏன் எனவும் காவல்துறைக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP office petrol Bomb incident investigate to NIA


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->