மது விற்பனை முறைகேட்டால் அரசுக்கு நிதி இழப்பு! பி.டி.ஆர்.,ஐ கோர்த்துவிட்ட பாஜக நிர்வாகி! - Seithipunal
Seithipunal


டாஸ்மாக் விற்பனை குறித்து அவதூறு பரப்பதாக பாஜக நிர்வாகி நிர்மல் குமாருக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்தார். இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி முறைகேடு செய்ததற்கான ஆதாரம் உள்ளது என பாஜக நிர்வாகி நிர்மல் குமார் பதில் செய்துள்ளார்.

தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் மது கொள்முதல் தொடர்பாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தியைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பேசும் நிர்மல் குமாருக்கு தடை விதிக்க வேண்டும் என  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை சாதித்த சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து பாஜக நிர்வாகி நிர்மல் குமார் அவதூறு கருத்துக்களை தெரிவிக்க தடைவிதித்து உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நிர்மல் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த பதில் மனுவில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு தன்னிடம் போதிய ஆதாரமும் உள்ளதாகவும், அந்த முறைகேடுகளையும் மறைப்பதற்காகவே தன் மீது இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழக நிதி அமைச்சர் அளித்த பேட்டியில் தமிழகத்தில் மது விற்பனையில் முறைகேடு நடந்திருப்பதாகவும், அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் தான் குற்றச்சாட்டு முன்வைத்ததாக கூறியுள்ளார். எனவே என்னுடைய குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என செந்தில் பாலாஜி கூறுவது ஏற்புடையது அல்ல. 

எனவே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கருத்து கூற தடை விதித்தது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்பதால் அதனை நீக்க வேண்டும். மேலும் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தனது பதில் மனுவில் பாஜக நிர்வாகி நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் பாஜக நிர்வாகி நிர்மல் குமாருக்கும் இடையே நடந்த பஞ்சாயத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை பாஜக நிர்வாகி கோர்த்து விட்டுள்ளார். ஏற்கனவே திமுகவில் அமைச்சர்கள் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் நிலையில் பாஜக நிர்வாகியின் இந்த பதில் மனு திமுக அமைச்சர்கள் இடையே மேலும் ஒரு சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP Nirmal Kumar filed reply in the case against Senthil Balaji


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->