உதயநிதி நாகரீகமானவரா? அநாகரீகமானவரா? பட்டியல் போட்ட பாஜக! பரபரப்பில் டெல்லி! - Seithipunal
Seithipunal


பாரதிய ஜனதா கட்சி மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "திமுக மக்களவை உறுப்பினர்களை அநாகரீகமானவர்கள் என்று சொல்லி விட்டாரே தர்மேந்திர பிரதான் அவர்கள் என்று துடி துடிக்கின்றனர் திமுகவினர்.

பிரதமர் 'மோடி' யை 'கேடி' என்றும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை 'மாமி' என்றும் 'அவள்' என்றும்,

'பிச்சையெடுத்துக் கொண்டிருக்கும் மக்களிடம் பிரதமரும், முதல்வரும் பாத்திரம் ஏந்தி பிச்சையெடுக்கும் ஒரே அரசு இந்திய அரசு' என்றும்,

'வேலையில்லா முடி திருத்துபவர்கள், பூனையை பிடித்து சரைப்பார்களாம்' என்றும்,

'ஜெயலலிதா அம்மா, மோடி அப்பா என்றால் என்ன உறவு முறை?' என்றும்,

நாங்கள் என்ன 'தீண்டத்தகாதவர்களா'? என்றும், 

'ஹிந்தி படிக்கும் உத்தரப்பிரதேச மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் தமிழகத்தில் சாலையை பெருகுகிறான், வீடு கட்டுகிறான், கக்கூஸ் கழுவறான், அது தான் ஹிந்தி படித்தவன் நிலைமை' என்றும் பேசிய தயாநிதி மாறன் நாகரீகமானவரா? அநாகரீகமானவரா?

ஒரு முதலமைச்சர் என்றும் பாராமல், எடப்பாடி டெட் பாடி என்றும், 'விட்டால் எடப்பாடி சசிகலாவின் கால்களுக்குள்ளேயே  புகுந்து விடுவார்' என்றும், 

சனாதன தர்மத்தை (ஹிந்து மதத்தை) அழிப்பேன் என்றும், பேசிய உதயநிதி ஸ்டாலின் நாகரீகமானவரா? அநாகரீகமானவரா?

'கள்ள உறவில் குறை பிரசவத்தில் பிறந்தவர் தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி' என்று பேசிய ஆ.ராசா நாகரீகமானவரா? அநாகரீகமானவரா?

சட்டமன்றத்தில் கொலை நடந்தாலும் வழக்கு தொடுக்க முடியாது என்று ஆளுநரை மிரட்டியும்,

'பார்ப்பன நாய்கள்' என்றும், ஆதிதிராவிடர்களை நீதிபதியாகியது திராவிட இயக்கங்கள் போட்ட பிச்சை என்றும்,

'எச்ச இலை எடுக்கிற வேலை தான் கவர்னர் வேலை'  என்றும், பேசிய ஆர்.எஸ். பாரதி நாகரீகமானவரா? அநாகரீகமானவரா?

பல மக்களவை உறுப்பினர்களும், அமைச்சர்கள் தா மோ அன்பரசன், பொன்முடி, கே.என்.நேரு என திமுகவினரின் அநாகரீக பேச்சுகளுக்கு அளவே இல்லை. 

நாகரீகம் குறித்து பேச திமுக வினருக்கு எந்த தகுதியும் இல்லை. அநாகரீகத்தின் இருப்பிடமே திமுக தான் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP Narayanan Thirupathy Say About DMK kanimozhi Udhay


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->