பித்தலாட்டம்! மாட்டிக்கிட்ட பங்கு - உதயநிதிக்கு பதிலடி கொடுக்கும் அரசியல் பிரபலங்கள்! - Seithipunal
Seithipunal


என்னை இழிவு செய்வதாக நினைத்து தங்களின் அரசியல் முதிர்ச்சி இவ்வளவு தான் என்று அம்பலப்பட்டு நிற்பவர்களை பார்த்து பரிதாபம் மட்டுமே வருகிறது என்று, ஆந்திராவில் தன்னை அவமதித்து ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஒரு டிவிட் ஒன்றை போட்டு இருந்தார்.

இதுகுறித்து பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தனிமனித தாக்குதலில்,  அவமரியாதை செய்வதில் யார் ஈடுபட்டாலும் அது வன்மையாக கண்டிக்கத்தக்கதே. இ‌ந்த செயலை செய்தது யார் என்று தெரியாமலேயே ஆர் எஸ் எஸ் ஐ குறை கூறுவது தான் அரசியல் முதிர்ச்சியா? 

அமைச்சர்கள்,  மக்களவை உறுப்பினர்கள் உள்ளிட்ட திமுக வினர் பலர் பிரதமர் உட்பட பாஜக தலைவர்கள் மீது தனிமனித தாக்குதலில் ஈடுபட்ட போது அமைதி காத்தது தான் அரசியல் முதிர்ச்சியா?

உங்கள் படம் இருந்த போஸ்டர் மீது  அவமரியாதை செய்தவர்களை நான் கண்டிக்கிறேன்.  அதே அரசியல் நாகரீகம், பக்குவம்,  முதிர்ச்சி உங்களிடம் உள்ளதா?" என்று நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேபோல் நாம் தமிழர் கட்சி இடும்பாவனம் கார்த்தி விடுத்துள்ள செய்தியில், "கடந்தாண்டு நவம்பரில் வெளியான காணொளி இது! "சங்கிகளைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது" என இப்போது அதை வைத்து  உருட்டிக் கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை மடைமாற்றம் செய்ய இந்தப் பித்தலாட்டம்! மாட்டிக்கிட்ட பங்கு Moment! Better Luck Next Time Bro!" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP Narayanan NTK Karthik reply to Udhay


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->