கர்நாடக தேர்தல் பாஜகவுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது- வானதி சீனிவாசன்.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானிலை சீனிவாசன் கோவையில் இன்று செய்தியாக்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் மக்களின் தீர்ப்பை பாரதிய ஜனதா இருக்கிறது அங்கு ஆட்சி அமைக்க முடியாமல் போனது குறித்து கட்சி தலைமை கண்டிப்பாக ஆய்வு செய்யும்.

மக்களிடம் நெருக்கமான அணுகுமுறையை ஏற்படுத்த தேர்தலை பார்க்கிறோம் அந்த தேர்தல் முடிவை வைத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கனவு கொண்டிருக்கிறார். நிறைய முறை திராவிடத்தையும் மக்கள் புறக்கணித்துள்ளனர். கர்நாடகாவில் பிரதான எதிர்க்கட்சி வாய்ப்பை பாஜகவிற்கு மக்கள் கொடுத்துள்ளனர்.

 அதேபோல் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கர்நாடக தேர்தலில் அவருடைய பங்களிப்பை நன்றாகவே செய்துள்ளார். கர்நாடக தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு சவாலாக இருக்காது. அதேபோல் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என அவர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP MLA vaanathi seenivasan speech about Karnataka assembly election


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->