பதவியை ராஜினாமா செய்த மத்திய அமைச்சர்..அதிமுகவை வைத்து மாஸ்டர் பிளான் போட்ட பாஜக! அதிமுகவுக்கு அதிஷ்டம் அடித்ததா? - Seithipunal
Seithipunal


மக்களவையில் நிறைவேறிய மூன்று வேளாண் மசோதாக்களை நாளை மாநிலங்களவையில் தாக்கல் செய்து, இந்த மசோதாக்களை சட்டமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலிதளம் மக்களவையில் நிறைவேறிய மூன்று வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியை சேர்ந்த ஹர்ஷ்மத் கர் பாதல் மத்திய அமைச்சரவையில் தான் வகித்து வந்த உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.  

மாநிலங்களவையில் மொத்தம் 244 இடங்கள் உள்ளது இதில் பாஜகவுக்கு 87 உறுப்பினர்கள் உள்ளனர் இதனால் மாநிலங்களவையில் இந்த மசோதா அவை எளிதாக நிறைவேற்றுவது குறித்து அரசுக்கு சிக்கல் எழுந்துள்ளது.

இதையடுத்து பல்வேறு மாற்று கட்சியினர் ஆதரவை அரசு தரப்பு நாடி வருவதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். அதிமுக, ராஷ்டிரிய ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி போன்ற கட்சிகளின் ஆதரவுடன் விவசாய மசோதாக்களை நிறைவேற்ற முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது.

மாநிலங்களவையில் மொத்தமுள்ள 244 இடங்களில் பாஜகவுக்கு 87 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் மாநிலங்களவையில் பல மசோதாக்களை நிறைவேற்றி சட்டமாக்குவதில் சிக்கல் எழுந்து வருகிறது. இதனால் சிரோமணி அகாலிதளம் கட்சியை சேர்ந்த ஹர்ஷ்மத் கர் பாதல் ராஜினாமா செய்த மத்திய அமைச்சர் பதவியை அதிமுகவுக்கு கொடுத்து மாநிலங்களவையில் அதிமுகவின் ஆதரவை நிரந்தரமாக்க பாஜக மாஸ்டர் பிளான் போட்டு அதற்கான ஆலோசனைகளை டெல்லி பாஜக மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp master plan for aiadmk support


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->