ம.பியில் மீண்டும் ஆட்சியை பிடிக்குமா பாஜக? அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை.! - Seithipunal
Seithipunal


230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேச மாநிலத்திற்கு சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. 

தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற கருத்துக் கணிப்பில், தொடர்ந்து நான்காவது முறையாக பதவி வகித்து வந்த முதலமைச்சர் சிவராஜ் சவுகான் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்தன. 

இருப்பினும், காங்கிரஸ் கட்சி மத்திய பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என அக்கட்சி நம்பிக்கை தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி மொத்தமுள்ள 230 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி 151 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 

காங்கிரஸ் கட்சி 59 இடங்களிலும், பிற கட்சிகள் மூன்று இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இதனால் மீண்டும் தனிப் பெரும்பான்மையுடன் மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bjp leading madhya pradesh vote counting


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->