பா.ஜ.க. தலைவர் எச்.ராஜா உடல்நிலை கவலைக்கிடம்...! - முதல்வர் நேரில் நலம் விசாரிப்பு - Seithipunal
Seithipunal


சென்னையில் நடைபெற்ற தனியார் செய்தி நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த எச். ராஜா அவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அங்கு மேடையிலேயே மயங்கி விழுந்ததால் நிகழ்ச்சி அரங்கில் இருந்தவர்களிடையே பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. அவரை உடனடியாக அருகில் இருந்தவர்கள்  மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்தனர்.

அதன் பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனை சென்னைக்கு மாற்றப்பட்டார். அங்கு மேற்கொண்ட பரிசோதனைகளில், அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டிருப்பது மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

தற்போது தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.இந்த செய்தி அரசியல் வட்டாரங்களில் அதிர்வலை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு கட்சித் தலைவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர்.

அந்த வகையில், மு.க. ஸ்டாலின் அவர்களும், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு அவர்களும் மருத்துவமனைக்கு நேரில் சென்று உடல்நிலை குறித்து கேட்டறிந்து விரைவில் குணமடைய வாழ்த்துத் தெரிவித்தனர்.

இதற்கு நன்றி செலுத்தும் விதமாக பாரதீய ஜனதா கட்சி தலைவர் எச். ராஜா தனது சமூக வலைதளப் பதிவில், “முதல்வரும், டி.ஆர். பாலு அவர்களும் வந்து சந்தித்து ஆறுதல் தெரிவித்தது மனமார்ந்த ஆதரவாக அமைந்தது. விரைவில் முழு நலத்துடன் மக்களுக்கான பணியில் திரும்புவேன்” என நன்றியை பதிவு செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP leader H Raja health worrying Chief Minister personally inquires about his health


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->